குறிஞ்சிப்பாடி அருகே விருப்பாட்சி கிராமத்தில் விவசாயிகள் நலனுக் காக கட்டப்பட்ட உணவு தானிய கிடங்கு பயன்பாடு இன்றி உள் ளது.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பாட்சி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் 2015 -2016-ம் ஆண்டு ரூ. 8 லட்சம் மதிப்பில் உணவு தானிய கிடங்கு கட்டப்பட்டுள்ளது. விருப்பாட்சி, கண்ணாடி, ஆடுர் குப்பம், காஞ்சநாதன் பேட்டை, மஞ்சபேட்டை ஆகிய கிராம விவசாயிகள் தங்கள் வயலில் விளையும் உணவு தானியங்களை சேமித்து வைத்து பின்னர் விற்பனை செய்வதற்கு வசதியாக கட்டப்பட்ட இந்த உணவு தானிய கிடங்கு பயன்பாடு இன்றியும், சரிவர பராமரிப்பில்லாமல் உள்ளது. தற்போது இதனை சமூக விரோதிகள் மது அருந்தவும் வேறு சில சமூக விரோத செயல்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஒன்றிய அதிகாரி கள் இந்த தானிய கிடங்கை பார்வையிட்டு சீரமைத்து விவசாயி களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இப் பகுதி விவசாயிகள் உள்ளனர்.