தமிழகத்தில் மழையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக் கும் வகையில் ஒரு நாள் ஊதி யத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டுமென அரசு ஊழியர்கள் சங்கங்கள் நேற்று அறிவித்துள்ளன.
கு.பால்பாண்டியன்
(தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர்): தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வரும் அரசுப் பணியாளர்களிடமிருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்ள வேண்டுமென தெரிவித்துக்கொள்கிறோம்.
பி.கே.சிவக்குமார்
(தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம்): தமிழகத்தில் பெய்து வரும் கனமழையினால் மக்கள் உணவின்றி, உறைவிடமின்றி உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். எனவே பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வருவாய்த்துறை பணியாளர்களிட மிருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
உ.மா.செல்வராஜ்
(தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில தலைவர்): கனமழையினால் பல் வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு துயரத் துக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக் கும் வகையில் அனைத்து துறை களில் பணியாற்றி வரும் அரசு பணியாளர்களிடமிருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டுமென தெரிவித் துக்கொள்கிறோம்.