தமிழக அரசைக் கண்டித்து ஜனவரி 5-ம் தேதி திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டைக்கு பதில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறவுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி வரும் ஜனவரி 5-ம் தேதி சென்னையில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு பகுதியில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த காவல் துறையினரிடம் திமுகவினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அனுமதி கேட்டு காவல் துறை அதிகாரிகளிடம் திமுக நிர்வாகிகள் நேற்று மனு கொடுத்துள்ளனர்.