திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின்றி வெறிச்சோடியது. 
தமிழகம்

தி.மலை அண்ணாமலையார் கோயில் வெறிச்சோடியது; கரோனா அச்சத்தால் பக்தர்கள் வருகை குறைந்தது 

இரா.தினேஷ்குமார்

கரோனா தொற்று பரவல் எதிரொலியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வருகை குறைந்து ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.

கரோனா ஊடரங்கு தளர்வுக்குப் பிறகு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக உள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களே சாமி தரிசனம் செய்து வந்தனர். விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் வெளியூர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் பக்தர்கள் வருகை அடியோடு குறைந்துவிட்டதால், அண்ணாமலையார் கோயில் பிரகாரம் வெறிச்சோடியது. இதேபோல், கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் எதிரொலித்திருந்தது.

இது குறித்து, கோயில் ஊழியர்கள் கூறுகையில், "கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவும் பக்தர்கள் வருகை குறைவுக்கு காரணமாக உள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT