சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி ஊராட்சி பகுதியில் சிறுவர், சிறுமியர் மரக்கன்று நட்டு நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரில் நடிகர் விவேக் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (ஏப். 18) அந்த நகரில் வசிக்கும் சிறுவர்கள், சிறுமியர் நகரின் தெருவில் மரக்கன்றை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினர். நாட்டின் வளர்ச்சிகாக பல லட்சம் மரங்களை நட்டு வைத்து சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்ட நடிகர் விவேக் மறைந்த நாளை மரக்கன்று நடும் நாளாகவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இது குறித்து, அந்த சிறுவர்கள், சிறுமியர்கள் கூறுகையில், "நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றை நட்டுள்ளோம். அதனை பாதுகாப்பாக வளர்ப்போம். இதுபோல, நகரின் பல தெருக்களில் மரக்கன்றுகளை பெற்றோருடன் இணைந்து நட முடிவு செய்துள்ளோம். எங்களுடன் பள்ளியில் படிக்கும் நண்பர்களிடமும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்று நடவைப்போம்" என்றார்.