தமிழகம்

நேரு உள் விளையாட்டரங்கில் இடைவிடாது பணிபுரியும் தன்னார்வலர்கள்: 1 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேர்ந்தன

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி சார்பில் நேரு உள் விளையாட்டரங்கில் செயல்பட்டு வரும் முகாமில் தன்னார்வலர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து வருவதால் 1 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேர்ந்துள்ளன.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாநில அரசுகள், மத்திய அரசின் பொதுத்துறை நிறு வனங்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வழங்கப்பட்டு வரு கின்றன.

அப்பொருட்கள் நேரு உள் விளை யாட்டரங்கில் பெறப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 500 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தன்னார்வலர்கள் இடை விடாமல் பணிசெய்து 4 நூடுல்ஸ் பாக்கெட்டுகள், 4 பிஸ்கெட் பேக் கெட்டுகள், 500 மி.லி அளவு கொண்ட 2 பாக்கெட் கெட்டுப்போகாத பால், 2 லிட்டர் குடிநீர் பாட்டில், 2 ரொட்டி பாக்கெட்டுகள், 500 கிராம் பால் பவுடர் பாக்கெட் 2, ஜூஸ் பாட்டில் 1, டீ மற்றும் காபி பாக்கெட் 2, பேரீச்சம் பழம் 2 பாக்கெட், 1 மெழுகுவர்த்தி, 5 சாக்லெட்டுகள் 5 என 11 வகையான பொருட்களை ஒரு பையில் போட்டு பேக் செய்து வருகின்றனர். தன்னார்வலர்களில் சிலர், கைக்குழந்தையுடன் வந்து பணிசெய்து வருகின்றனர். தன்னார் வலர்களின் இந்த சேவையால் கடந்த 5 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவார ணப் பொருட்கள் விநியோகிக் கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இங்கு பேக் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை கொடுத் தவர்களுக்கு இணையானவர்கள். 10-ம் தேதி மாலை வரை 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் சென்று சேர்ந்துள்ளன. பாரபட்சமின்றி பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் வகையில், விநியோகப் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு பணியாற்றும் தன்னார் வலர்களின் வீட்டு முகவரி மற்றும் இமெயில் முகவரியை பதிவு செய்திருக்கிறோம். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இங்கு வந்த விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவர், இங்கு பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு நொடிப்பொழுதில் பாராட்டு சான்றிதழ்களை அவரவர் இமெயில் முகவரிக்கு அனுப்ப மென்பொருள் ஒன்றை இலவசமாக உருவாக்கி தருவதாக தெரிவித்துள்ளார். அந்த சான்றிதழில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து இடம்பெற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும் ஆணையர் விக்ரம் கபூரின் கையெழுத்தும் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT