தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரமும், பல்வேறு கிராமங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நேற்று 8 இடங் களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினமும் விடிய விடிய மழை கொட்டியது. நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக தூத்துக்குடி, காயல்பட்டிணத்தில் தலா 8 செ.மீ., திருச்செந்தூரில் 7 செ.மீ. குலசேகரப்பட்டிணத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியது.
திருச்செந்தூர் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள குரும்பூர் பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து சாலையை மூழ் கடித்தது. இதுபோல் குரும்பூரில் இருந்து ஏரல் செல்லும் சாலை, தூத்துக்குடி நாசரேத் சாலை, தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை ஆகியவை துண்டிக்கப்பட்டன.
திருச்செந்தூர், காயல்பட்டிணம் பகுதியில் உள்ள குளங்கள் நிறைந்து, தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகள், வயல்வெளிகளை மூழ் கடித்து வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது.
8 இடங்களில் மறியல்
தூத்துக்குடியில் நேற்று பகலிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் நகரம் முழுவதும் தண்ணீரில் மிதக் கிறது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளில் தங்க முடி யாமலும், அத்தியாவசியப் பொருட் கள் முழுவதும் சேதமடைந்ததாலும் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகர் முழுவதும் 8 இடங்களில் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டனர். தேங்கியுள்ள நீரை அகற்றக் கோரி காலை தொடங்கிய மறியல் போராட் டம் மதியம் 3 மணி வரை நீடித்தது. அம்பேத்கர் நகர் மக்கள் பிரையன்ட் நகர் சாலையில் மறியல் செய்து, அங்கேயே மதியம் சமையல் செய்து உண்டனர். அதிகாரிகள் சமரசம் செய்து மறியலை கைவிடச் செய்தனர்.
இதனிடையே மாவட்ட நிர்வாகம் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. இதன் காரண மாக பள்ளிக்கு செல்லும் மாணவர் கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பல இடங்களில் சாலைகள் துண் டிக்கப்பட்டதால், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு மிகுந்த அவதிப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நீடிக்கும் மழையால் மொத்தமுள்ள 11 அணைகளும் நிரம்பிவிட்டன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் நேற்று முன்தினம் இரவு முழுக்க மழை பெய்ததால் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தில் அனைத்து குளங்களும் நிரம்பி வழியும் நிலையில், மேலும் மழை நீடித்தால் குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குற்றாலம்
குற்றாலத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனு மதிக்கப்படவில்லை. நேற்று காலையில் வெள்ளம் குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மீண்டும் மாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து குளிக்க தடைவிதிக்கப்பட்டது.