தஞ்சை பெரிய கோயில் மூடல். 
தமிழகம்

கரோனா பரவல்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்குத் தடை

வி.சுந்தர்ராஜ்

கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து புராதானச் சின்னங்கள், இடங்கள் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை வரும் மே மாதம் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இதன்படி, உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்கள் செல்ல இன்று (ஏப்.16) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனக் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலைத் தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் சுற்றுலாப் பயணிகள் காண வருவார்கள். இந்நிலையில், ஒரு மாத காலம் பெரிய கோயில் மூடப்பட்டுள்ளது, சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

இதேபோல், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலும் மூடப்பட்டுள்ளது.

மூடப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
SCROLL FOR NEXT