தமிழகம்

தமிழ் புத்தாண்டு தினத்தில் முகக் கவசம் அணியாத 40 ஆயிரம் பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தமிழக அரசு உத்தரவுப்படி, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக் கவசம்மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றியதாக கடந்த 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்புத்தாண்டு தினமான 14-ம் தேதிமட்டும் 40,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது 8-ம் தேதி முதல்14-ம் தேதி வரை மொத்தம் 10,018 வழக்குகளும், 14-ம் தேதியில் 1,011 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கடந்த 7 நாட்களில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 59 வழக்குகள் பதிவாகி உள்ளன. 14-ம் தேதி மட்டும் 69 ஆயிரத்து 553 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாத நபர்கள் மீது கடந்த 7 நாட்களில் ஒருலட்சத்து 7 ஆயிரத்து 836 வழக்குகளும், 14-ம் தேதி மட்டும் 14 ஆயிரத்து 868 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகப்படியாக சுமை ஏற்றுதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமுறை மீறல்கள் தொடர்பாக கடந்த 7 நாட்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 250 வழக்குகளும், 14-ம் தேதியன்று 19 ஆயிரத்து 551 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகவலை தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT