தமிழகம்

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க ஆளுநர் தலைமையில் ஆலோசனை: முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க மாநில எல்லைகளில் கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்ற கரோனா மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

புதுச்சேரியில் இன்று புதிதாக 413 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து புதுச்சேரியில் பரவிவரும் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் காணொளி மூலம் அனைத்து பிராந்திய அதிகாரிகள் உடன் கரோனா ஆலோசனை கூட்டம் ராஜ் நிவாஸில் துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதரத்தை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்,

தடுப்பூசி செலுத்துவதை மேலும் விரிவுபடுத்த வேண்டும், கரோனா பரவலைத் தடுக்க மாநில எல்லையில் உடல் வெப்பப் பரிசோதனை நடத்துவது, கட்டுப்பாடுகளை விதிப்பது, வார சந்தையை மாற்றுவது என பல்வேறு முடிவுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கரோனா வார்டுகளில் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT