கரோனா தடுப்பூசி முகாம். 
தமிழகம்

முடிச்சூர் ஊராட்சியில் 400க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி

பெ.ஜேம்ஸ்குமார்

முடிச்சூர் ஊராட்சியில் இன்று 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஊராட்சிகள் உள்ளன. இதில் மேடவாக்கம், பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் கரோனா பாதிப்புகள் தினமும் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுகாதாரத்துறை மூலம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக இன்று (ஏப்.15) முடிச்சூர் ஊராட்சியில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ. கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். உடன் ஊராட்சி செயலாளர் வாசுதேவன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தீபிகா ஆகியோர் இருந்தனர்.

இதில், முடிச்சூர் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல, மற்ற ஊராட்சிப் பகுதிகளிலும் தொடர்ந்து முகாம் நடத்தி பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ.கலைச்செல்வன் கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT