தமிழகம்

முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மறைவு

செய்திப்பிரிவு

இந்திய தேர்தல் ஆணையராகபணியாற்றிய ஜிவிஜி கிருஷ்ண மூர்த்தி நேற்று காலமானார். அவருக்கு வயது 86.

இந்திய தேர்தல் ஆணையத் தின் தலைமை தேர்தல் ஆணையருடன் 2 ஆணையர்கள் பணியாற்றுவார்கள். அந்த வகையில்,கடந்த 1990 முதல் 1996 வரைஇந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன்இருந்தபோது, 1993 முதல் 1996 வரை தேர்தல் ஆணையராக இருந்தவர் ஜிவிஜி கிருஷ்ணமூர்த்தி. டெல்லியில் தங்கியிருந்த அவர் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று காலை 10 மணிக்கு காலமானார்.

அவருக்கு பத்மா என்ற மனைவி, ஜி.வி.ராவ் என்ற மகன், ராதா போடபதி என்ற மகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு, இரங்கல் தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையராக கிருஷ்ணமூர்த்தி இருந்தபோது செய்த சிறப்பான பங்களிப்புகள், அவரது பணிகளை நினைவுகூர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT