நடைபாதைகளை மறைத்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர் களை உடனடியாக அகற்றும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
சாலையோரங்களில் விதி முறைகளை மீறி டிஜிட்டல் பேனர் கள் வைப்பதைத் தடுக்கும் வகை யில் நான் தொடர்ந்த வழக் கில் உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள் ளது. அனுமதி பெறாமல் வைக்கப் படும் டிஜிட்டல் பேனர்களை அகற் றுவதோடு, அந்த பேனர்களை வைப்போர் மீது குற்ற நட வடிக்கை மேற்கொள்ள வேண் டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவை அதிகாரிகள் செயல் படுத்தவில்லை என்று மனுவில் டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.
இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்த ரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை நகரில் நடைபாதைகளை மறைத்து அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் தொடர்பான புகைப் படங்கள் மற்றும் அது பற்றி பத்திரிகைகளில் வெளியாகி யுள்ள செய்திகளைக் காட்டி மனு தாரர் டிராபிக் ராமசாமி வாதிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜ ரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமை யாஜி, இந்த விவகாரத்தில் சட்டப்படி அரசு நடவடிக்கை மேற் கொள்ளும் என்றும், விதிமுறை களை மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
விதிகளை மீறியும், மக் கள் நடக்கக்கூட முடியாத வகை யிலும் சென்னை மாநகர வீதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவது தொடர்பாக தங்களின் கடுமையான அதிருப் தியை நீதிபதிகள் தெரிவித் துக் கொண்டனர். நீதி மன்ற உத்தரவின்படி விசாரணை யின்போது ஆஜராகியிருந்த சிறப்பு தாசில்தார் விஜயலட்சுமி, “அனுமதி பெறாமல் வைக்கப் படும் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, சென்னை மாநகரில் அனுமதி பெறாமலும் நடைபாதைகளை மறைத்தும் வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்க ளையும் உடனடியாக அகற்று மாறு உத்தரவிட்ட நீதிபதி கள், விசாரணையை வியாழக் கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தனர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் புதன்கிழமை நடந்த விசாரணை யின்போது சென்னை மாநகர போலீஸ் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணனும் ஆஜராகி இருந்தார்.