தமிழகம்

பதிவாளருடன் பேச்சுவார்த்தை: சென்னை பல்கலை. மாணவர் போராட்டம் தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

பதிவாளருடன் நடந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை ஜன.4-ம் தேதிக்கு தள்ளிவைத்திருப்பதாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழ கத்தில் கடந்த 14-ம் தேதி நடை பெற்ற பேரிடர் மேலாண்மை கருத்தரங்கில் பொது ஆட்சியியல் துறை மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பிய விவகாரம் போராட்டமாக வெடித்தது.

அந்த மாணவர் தாக்கப்பட்ட தாகக் கூறி, பொது ஆட்சியியல் துறை மாணவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து 22-ம் தேதி வரை பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டது.

எனினும் மெரினா விடுதியில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை பிச்சையெடுக்கும் போராட்டமும் நடத்தினர். விடுதி யில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார். அவரது அலுவலகத்திலே பேச்சுவார்த்தை நடந்தது.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘மாணவர் தாக்கப் பட்ட விவகாரம் குறித்து விசாரிப் பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்படுவதாகவும் மாணவர் களின் நலன் கருதி செவ்வாய்க் கிழமை (இன்று) முதல் விடுதி இயங்கும் என்றும் பதிவாளர் உறுதி அளித்தார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 3-ம் தேதி வரை விடு முறை விடப்பட்டுள்ளது. பதிவாளர் அளித்துள்ள சில உறுதிமொழி களின் பேரில் எங்கள் போராட் டத்தை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT