அருப்புக்கோட்டையில் களத்தில் நிற்கும் வைகை செல்வன் கரையேறக் கூடாது என்பதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜின் ஆட்கள் ரொம்பவே மெனக்கிட்டு களப்பணி ஆற்றினார்களாம். கடந்த தேர்தலிலேயே வைகையை தோற்கடிக்க அதிமுக தரப்பிலிருந்து திமுக தரப்புக்கு பெருந்தொகையை ஃபைனான்ஸ் செய்தார்களாம். இந்த முறை, திமுக வேட்பாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சியே நேரடியாக அதிமுகவின் முக்கியத் தலைகள் சிலரை ‘கவனித்து’விட்டாராம். இதனால் பல இடங்களில் பாதி வழியிலேயே அதிமுக பூத் ஏஜென்ட்கள் பம்மிப் படுத்துவிட்டார்களாம். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் வைகை செல்வன், ஓட்டுக்கு 500 வீதம் 70 சதவீத வாக்காளர்களைக் கவனிக்கும் வகையில் கரன்சியை இறக்கி இருந்தாராம். அதையும் பல இடங்களில் மொத்தம் மொத்தமாக ஸ்வாகா செய்துவிட்டார்களாம் ஆளும்கட்சிக்காரர்கள். இதனால் ஏக குஷியில் இருக்கிறாராம் மீசைக்கார அண்ணாச்சி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்