தமிழகம்

எலெக்‌ஷன் கார்னர்: கடை எங்கது... டோக்கன் யாருதுன்னு தெரியல!

செய்திப்பிரிவு

'அந்த 2000 ரூபாய் டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை' என்று கும்பகோணத்தில் உள்ள பிரிமியம் மளிகைக்கடையின் முதலாளியைக் கதற வைத்திருக்கிறது ஒரு அரசியல் கட்சி. ஓட்டுக்காக அந்தக்கட்சி வாரிவழங்கிய டோக்கனோடு கடைக்கு படையெடுத்தவர்களுக்கு விளக்கம் சொல்லிசொல்லி அலுத்துப்போன கடை ஊழியர்கள் ஒரு கட்டத்தில், ‘வேட்பாளர்கள் வழங்கிய டோக்கனுக்கும் எங்களுக்கும் தொடர்புஇல்லை’ என அச்சடித்து கடை வாசலில் ஒட்டி வைத்துவிட்டர்கள்.

“25 வருசமா கடைநடத்துறேன். இப்படியெல்லாம் எந்தக்கட்சிக்கும் டோக்கன் கொடுத்தது கிடையாது. இப்போயாரோ கொடுத்திருக்கும் இந்த டோக்கனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க கடையோட பெயரை பயன்படுத்தி யார் இந்த வேலையைச் செஞ்சாங்கன்னு தெரியலை” என பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பிவருகிறார் கடையின் உரிமையாளர் ஷேக் முகமது. இதனிடையே, இந்த டோக்கன் விநியோகம் தொடர்பாக அமமுக பிரமுகர் கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது கும்பகோணம் போலீஸ். ஏம்பா... ஆர்.கே.நகர்ல ஆரம்பிச்சத இன்னும் நீங்க விடவே இல்லையா!

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

SCROLL FOR NEXT