மூத்த பத்திரிகையாளர் ஜி.என்.சீனிவாசன் காலமானார்.
மூத்த பத்திரிகையாளர் ஜி.என். சீனிவாசன், உடல்நலக் குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 100. ‘தி இந்து’ நாளிதழில் 1953-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அவர், 30 ஆண்டுகள் பணியாற்றினார். அனைவராலும் ஜிஎன்எஸ் என அழைக்கப்பட்ட அவருக்கு, பத்திரிகை துறையில் 40 ஆண்டுகள் பணி அனுபவம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நிருபர்கள் சங்கத்தின் தலைவராக அவர் பணியாற்றியபோது பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இளம் பத்திரிகையாளர்களுக்கு ஜிஎன்எஸ் சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். அவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
அவரது மறைவுக்கு சென்னை நிருபர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.