தமிழகம்

எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்: கே.என்.நேரு கருத்து

செய்திப்பிரிவு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இம்மையத்துக்கு 3-வது முறையாக நேற்று சென்ற திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு, அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டார். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

அதன்பின் வெளியே வந்த கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு வேண்டாம் என தவிர்த்த அவர், ‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்' எனக்கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் சென்றனர்.

SCROLL FOR NEXT