தமிழகம்

எலெக்‌ஷன் கார்னர்: அப்போ கேப்டன்... இப்போ பிக் பாஸ்!

செய்திப்பிரிவு

2006-ல் தொண்டாமுத்தூர், பேரூர், சிங்காநல்லூர், கோவை மேற்கு, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தொகுதிகளில் தேமுதிக பிரித்த ஓட்டுக்கள் திமுகவுக்கு வேட்டு வைத்து அதிமுகவை வெல்ல வைத்தன. அதேபோல் இம்முறை, கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர் தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை கமல்ஹாசனின் மய்யம் பெறும் என கணிக்கப்படுகிறது. இதனால், “அப்போது கேப்டனால் வீழ்ந்தோம்... இப்போது பிக் பாஸால் வீழ்ந்துவிடுவோம் போலிருக்கிறது” என்று திமுக வேட்பாளர்கள் சிலர் நடுக்கத்தில் இருக்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

SCROLL FOR NEXT