புனே ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தவ மணியை திருச்சி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகாராஷ் டிரா போலீஸார் அழைத்துச் சென்றனர்.
பண்ருட்டி அருகேயுள்ள பத்திரக்கோட்டையைத் சேர்ந் தவர் சண்முகம் மகன் தவமணி. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள இவர், கடந்த 2012-ம் ஆண்டு கடலூரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந் தார்.
அப்போது, 2013-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகரில் அனில் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசார ணைக்காக தவமணியை 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி ஆயுதப்படை போலீஸார் ரயிலில் புனே அழைத்துச் சென்றனர். திரும்பி வரும்போது, குல்பர்கா ரயில் நிலையத்தில் இருந்து தப்பினார். நீண்டகால தேடலுக்குப் பின், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தவமணியை புதுச்சேரியில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், காவலர்களை தாக்கிவிட்டு, குல்பர்கா ரயில் நிலையத்தில் இருந்து தப்பிச் சென் றது தொடர்பாக தவமணி மீது 224, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப் பூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதன் மீதான விசாரணை புனேவில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இங்கு ஆஜர் படுத்துவதற்காக தவமணியை அழைத்துச் செல்ல மகாராஷ் டிரா ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. முன்டோ நம்தியோ தலைமையி லான குழுவினர் திருச்சி வந்தனர்.
அவர்கள், நேற்றுகாலை 8.30 மணிக்கு தவமணியை திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி ஜங்ஷனுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் மகாராஷ்டிராவுக்குப் புறப்பட்டனர். அங்கு புனே ரயில்வே நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.பதக் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளனர். அப் போது தவமணிக்கு குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட உள்ளதாக மகாராஷ்டிரா போலீ ஸார் தெரிவித்தனர்.
கடந்தமுறை ரயிலில் வரும் போது தப்பிச் சென்றதால், இம் முறை கூடுதல் பாதுகாப்புடன் தவமணியை அழைத்துச் சென்றுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.