தமிழகம்

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது: அரசு தலைமை காஜி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ரம்ஜான் நோன்பு நாளை (ஏப்.14)முதல் தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில்ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இதற்கானபிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார்.

இந்நிலையில், நாளை (ஏப்.14)முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏப்.12-ம் தேதி மாலைரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும்காணப்படவில்லை. ஆகையால்புதன் கிழமை (ஏப்.14) அன்று ரமலான் மாத முதல் பிறை என்றுஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

இதன்படி ரம்ஜான் நோன்புதொழுகை நாளை முதல் தொடங்குகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது

SCROLL FOR NEXT