டெல்டா மாவட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய காந்த், மேடை முன்பாக வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தை அப்புறப்படுத்த தேமுதிக வினரிடம் கூறினார். இதையடுத்து ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் அகற்றினர். இத னால் கோபம் அடைந்த அதிமுக வினர், அங்கு வந்து விஜயகாந்த் பேனர்களை கிழித்து எறிந்து, மேடையையும் சேதப்படுத்தினர்.
இந்நிலையில், ஜெயலலிதா படம் அகற்றப்பட்டது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ எம்.ரங்கசாமி புகாரின்பேரில், விஜயகாந்த், தேமுதிக தெற்கு மாவட்டச் செயலர் ஜெயப்பிரகாஷ், வடக்கு மாவட்டச் செயலர் பரமசிவம், தஞ்சை மாநகரச் செயலர் அடைக்கலம் உட்பட 59 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 147, 504 மற்றும் பொதுச் சொத்து சேதம் தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகாந்த் நேற்று அவசர மனு தாக்கல் செய்தார்.
விஜயகாந்த் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடும் போது, ‘விஜயகாந்த் மீதான வழக்கில் 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விஜயகாந்த் தையும் கைது செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் ஏ.பி.பாலசுப் பிரமணியன் வாதிடும்போது, இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட உள்ளார். இதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
அப்படியென்றால் அதுவரை இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்ய மாட்டோம் என அரசு தரப்பில் உறுதியளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அதற்கு அரசு தரப்பில் பதிலளிக்கப்படவில்லை. இதையடுத்து, அடுத்த விசார ணையை ஜன. 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை விஜய காந்த்தை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.