கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் அழகரசன். 
தமிழகம்

காஞ்சிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கொலை: கண்டித்து சாலை மறியல்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே வழக்கறிஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பதற்றமான

சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ளகாரை கிராமத்தைச் சேர்ந்தவர்அழகரசன்(42). வழக்கறிஞராக உள்ளார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வெட்டப்பட்ட இடத்திலேயே அழகரசன் உயிரிழந்தார்.

அடையாளம் தெரிந்தது?

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேக்கின்றனர். கொலையாளிகள் குறித்து போலீஸாருக்கு அடையாளம் தெரிந்துள்ளது. கொலை செய்யப்பட்டவரும், கொலை செய்தவர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காரை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இவருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT