தமிழகம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேர் மீட்பு தமுமுக ரூ.2 கோடி உதவி: ஜவாஹிருல்லா தகவல்

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மீட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பல வாரங்களாக பெய்துவரும் தொடர்மழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமுமுக, மமக தொண்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக் கும் அதிகமான மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். வெள்ளத்தில் பலி யானவர்களின் சடலங்களை மீட்கும் பணியிலும் தமுமுகவினர் ஈடுபட்டனர்.

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 3 ஆயிரம் தொண்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கடந்த 8 நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் பாட்டில், பால், பாய், போர்வை, கொசுவலை, ஆடைகள், மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.2 கோடிக்கும் அதிக மான மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு விநி யோகிக்கப்பட்டுள்ளன. தமுமுக - மமக ஒருங்கிணைந்த பேரிடர் மீட்புக் குழு தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT