அதிமுகவில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் நீக் கப்பட்டு வருவதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பண்ருட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா மற்றும் அவரது கணவரும் பண்ருட்டி முன்னாள் நகர்மன்ற தலைவருமான பன்னீர்செல்வம் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க் கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டு விட்டோம். அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்துதேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலேயே இல்லை. ஒவ்வொரு கோயிலாகஇறை சுற்றுலா மேற்கொண்டி ருந்தோம். நாங்கள் ஊரில் இல்லாத நிலையில் அதிமுகவிற்கு எதிராகவோ, எதிர்கட்சி வேட்பாள ருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்?. நாங் கள் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதை பண்ருட்டி தொகுதி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட அனைவருக்குமே தெரியும். இதற்கு நான் வணங்கும் ஈசனும் ஜெயலலிதாவின் ஆன்மாவும் சாட்சி. இந்நிலையில் எங்களுடன் நகர ஒன்றிய செயலாளர்கள் உள்பட நால்வரை அதிமுகவில் இருந்து நீக்குவாத தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்தமன வேதனையை அளித்துள்ளது.
கடலூர் சம்பத் சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும்உளவுத்துறையை தன் கையில்வைத்திருக்கும் முதல்வர் பழனி சாமி காவல்துறை அறிக்கையை கேட்டு பெற்றிருந்தாலே உண்மைதெரியும்அல்லது எங்களையோ,பண்ருட்டி தொகுதி அதிமுகவி னரையோ அழைத்து பேசியிருந் தாலோ உண்மை தெரிந்திருக்கும்.
கண்டிப்பாக இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பால் எங்களை போன்ற ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள் ளார்கள். இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்களும்,பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களை போன்ற உண்மையான ஜெயலலிதா விசுவாசிகளை அதிமுக இழந்து கொண்டே போனால் அதிமுகவின் நிலை? பொறுத்திருப்போம். காலம் பதில் சொல்லும். இந்த செயல் பாடு விதி என்றிருப்போம். நல் லோர்க்கு நல்லதே நடக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.