தமிழகம்

பாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

பாஜக துணைத்தலைவரும், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளருமான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. 2011 ஆம் ஆண்டு கேடர் அதிகாரியான இவர் 8 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் காவல் பணியிலிருந்து விலகினார்.

தமிழகம் வந்த அவர் இங்கு ஓர் அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே இவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது முகக்கவசம் அணியாமல் அதிக அளவிலான மக்களை சந்தித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், கலந்துக்கொண்ட வேட்பாளர்கள் என பல கட்சிகளிலும் உள்ளவர்களை கரோனா தொற்று பாதிக்கிறது. சமீபத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி பாதிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் அண்ணாமலைக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள்தயவு செய்து பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT