தமிழகம்

கல்வி கடன் பெறுவதற்கு லஞ்சம்: மாணவி தற்கொலை

செய்திப்பிரிவு

மதுரை தெப்பக்குளம் பகுதியைசேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சென்னை தனியார் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்துவந்தார். அவரது தந்தை இறந்துவிட்டதால் படிப்பை தொடர சிரமப்பட்டார். இதனால், தனியார் வங்கியில் கல்விக் கடன் பெற வங்கி அலுவலர் ஒருவரை அணுகியுள்ளார். அவர், இன்சூரன்ஸ் மற்றும் வரி உட்பட ரூ.1.27 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

மாணவியும் கடன் வாங்கி ரூ.1.27 லட்சம் வரை தனியார் வங்கி அலுவலரிடம் ஆன்லைன் மூலம் பணம் தந்துள்ளார். எனினும் கல்விக் கடன் கிடைக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தந்ததால் விரக்தியில் மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தெப்பக்குளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

          
SCROLL FOR NEXT