ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜூனன் (20), சூர்யா (25). நண்பர்களான இருவரும் அண்மையில் தேர்தல்முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட் டனர். மேலும், மூன்று பேர்படுகாயங்களுடன் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். வழக்கில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்தப் படுகொலைகளை செய்தவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பட்டியலின இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலை யாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி சுதேசி மில் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை.ரவிக்குமார் கண்டன உரையாற்றினார். இதில் துணைநிலை அமைப்புகளின் மாநிலச் செயலா ளர்கள், தொகுதிச் செயலாளர்கள், மகளிர் விடுதலை இயக்கத்தினர் என 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரக்கோணம் சோகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குஆதரவாக வாக்கு சேகரித்த 2 பட்டியலின இளைஞர்களை கொடூ ரமாக படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலையில் அதிமுக,பாமகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள் ளது. ஆனால் காவல்துறை மூடிமறைத்து கொலைக்கு சம்பந்தமில் லாத ஒரு சிலரை கைது செய்து நாடகமாடுகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக உண்மையான கொலையாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே தமிழகம் முழுவதும் பட்டியலின மக்களுக்கு எதிரானவன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எதிலுமே சரியான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை. தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பாமகவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு சாதி வெறியை தூண்டிவிடுவதில் எடப் பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். அதனுடைய வெளிப்பாடுதான் இந்த படுகொலை.
படுகொலையில் உயிரிழந்த இருவரது குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும் என்பது வன்கொடுமை தடுப்புச்சட்ட விதிகளில் இருக் கிறது. அந்த விதிகளின்படி அவர் களுக்கு உடனடியாக தமிழக அரசு அவற்றை வழங்க வேண்டும். யார் இந்த படுகொலைக்கு தூண்டு தலாக இருந்தார்கள்.
எந்தெந்த அரசியல் கட்சிகள் இதற்கு பின்புலமாக இருந்தார்கள் என்பதை காவல்துறையினர் எந்தவித பாரபட்சமுமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்று வலியு றுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.