தமிழகம்

சென்னையில் வாசகர்களுடன் தி இந்து நிவாரண உதவி: ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்கு உணவு

செய்திப்பிரிவு

குடும்பத்துடன் அணிதிரண்ட தன்னார்வலர்கள்

*

தலைநகரில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக் கணக்கான பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் வாசகர்களுடன் இணைந்து ‘தி இந்து’ தமிழ் மேற்கொண்டு வரும் நிவாரண உதவி சேவையில், நேற்று பத்தாயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான இளை ஞர்களும், தன்னார்வலர்களும், தம்பதிகளும் குடும்பம் சகிதமாக ‘தி இந்து’ நிவாரண மையத்துக்கு நேரில் வந்து, மக்கள் சேவையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

வாசகர்களுடன் இணைந்து ‘தி இந்து’ முன்னெடுத்துள்ள இந்த நிவாரண சேவையின் 2-ம் நாளான நேற்று, கிரீம்ஸ் சாலை, மணலி, விச்சூர், மேற்கு மாம்பலம், சிந்தாதிரி பேட்டை, எழில்நகர், எர்ணாவூர் உட்பட 38 பகுதிகளில் நிவாரண உதவிகள் விநியோகிக்கப்பட்டன. நேற்று மட்டும் சுமார் பத்தாயிரம் பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிவாரண சேவையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நூற்றுக் கணக்கான வாசகர்கள் பங்கேற்ற னர். நூற்றுக்கணக்கான இளைஞர் கள், தன்னார்வலர்கள், தம்பதிகள் என குடும்பத்தோடு வந்து முழு நேர நிவாரண சேவையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நெகிழவைத்த சுட்டிப் பெண்

‘தி இந்து’ தொலைபேசி எண்ணுக்கு நேற்று அதிகாலையில் இருந்தே நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தேவகோட்டையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது மொத்த சேமிப்பையும் சேர்த்து வைத்து போர்வையாக வாங்கி அனுப்பியுள்ளார். சாலி கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிவாரண உத விப் பணியில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT