ராமநாதபுரம் எம்பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கரோனா 2-வது அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகளில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
புனித மாதமாகக் கடைபிடிக்கும் ரமலான் மாதம் இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கிறது. இதில் முஸ் லிம்கள் இரவுநேர வணக்கங்களில் ஈடுபடுவர். அதற்கேற்ப கட்டுப் பாடுகளை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணி ஆக உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு நவாஸ்கனி எம்.பி. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.