கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறை அடுத்துள்ள முதலாரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனது ரப்பர் தோட்டத்தில் ஊடுபயிராக மரவள்ளி கிழங்கு பயிரிட்டிருந்தார். அவற்றை அறுவடை செய்துபோது, ஒரு மரவள்ளி கிழங்கு மிக நீளமாக தரைப்பகுதியில் சென்றது. மேல்பகுதி மண்ணை அகற்றி சேதமடையாதவாறு கிழங்கை எடுத்தனர்.
அந்த கிழங்கு 6 அடி நீளம் வரை இருந்ததால் விவசாயிகள் ஆச்சர்யமடைந்தனர். அதன் எடை 4 கிலோ இருந்தது. அதிக நீளமுடைய மரவள்ளிக்கிழங்கை அப்பகுதியில் உள்ள மக்களும் வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். சீரான மண்சத்து மற்றும் தட்பவெப்பத்தால் இதுபோன்று அதிக எடையும், நீளமும் கொண்ட மரவள்ளி கிழங்குகள் உற்பத்தியாக வாய்ப்புள்ளதாக வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.