கோப்புப்படம் 
தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து புதுச்சேரியில் 6 மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்ற கண்டிப்பால் விரைவில் பணிகள் தொடக்கம்

செ.ஞானபிரகாஷ்

சட்டப்பேரவைத்தேர்தலைத் தொடர்ந்து, புதுச்சேரியில் அடுத்துஉள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. 6 மாதத்துக்குள் நடத்தஉச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ள தால், விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் உள்ள புதுச்சேரியில், புதுச் சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுவையில் 23, காரைக்காலில் 5, மாஹே, ஏனாம் தலா 1 என மொத் தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்புதுச்சேரி, உழவர்கரை, ஏனாம்,மாஹே, காரைக்கால் என 5 நகராட்சிகளும், வில்லியனூர், அரியாங் குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருநள்ளார், திருமலைராஜன்பட்டினம் நிரவி, நெடுங்காடு, கோட்டுச்சேரி என 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இவற்றில் மொத்தம் 98 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக கடந்த 1968-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன்பின்னர் 38 ஆண்டுகள் கழித்து பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின் 2006-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இப்பதவிக் காலம் முடிந்து, கடந்த 13.7.2011ல் இருந்து இப்பதவிகள் காலியாகவே உள்ளன.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் மொத்தமாகவே கடந்த 1968, 2006 என இருமுறை மட்டுமே இதுவரை நடந்துள்ளன. 2006ல் மொத்தம் 1,138 பிரதிநிதிகள் தேர்வானார்கள். பதவி காலம் 2011ல் முடிவடைந்தது. அதன் பிறகு 10 ஆண்டுகளாகியும் இதுவரை அடுத்த தேர்தல் நடத்தவில்லை.

தற்போது மீண்டும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "கடந்த 2018ல்உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை நடத்த புதுச்சேரி அரசுக்குஉத்தரவிட்டது. ஆனால், பல காரணங்களால் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் மாஹே வழக் கறிஞர் அசோக் குமார் என்பவர், ‘நீதிமன்ற உத்தரவை புதுச்சேரி அரசு செயல்படுத்தவில்லை’ என்று வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து உச்சநீதிமன்றம், “புதுச்சேரியில் 6 மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்ற கண்டிப்பான உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது. முக்கியமாக அரசியலமைப்பு சட்ட விதிப்படி மேலும் தாமதத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து அடுத்து புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடக்க உள்ளது" என்று தெரிவித்தனர்.

தடையின்றி நடக்குமா?

பல்வேறு கட்சியினர் தரப்பில் இதுபற்றி பேசியபோது, "புதுச்சேரி சிறிய ஊர். உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்தால் எம்எல்ஏக்கள் பலருக்கும் தங்களின் மதிப்பு குறையும் என்ற எண்ணம் உள்ளது. இத்தேர்தல் நடக்காததற்கு இது முக்கிய காரணம். தற்போது குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. அதனால், எளிதில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளை அதிகாரிகள் செய்ய முடியும்"என்று குறிப்பிடுகின்றனர்.

வழக்கு தொடர்ந்த மாஹே வழக்கறிஞர் அசோக்குமார் தரப்பில் பேசியபோது, "புதுச்சேரியில் 1968ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடக்காத போது எங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அதனால் 38 ஆண்டுகளுக்கு பிறகு 2006ல் உள்ளாட்சித்தேர்தல் நேர்தல் நடந்தது. தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் பாலி நாரி மன், நீதிபதி கவாய் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் 2 மாதத் துக்குள் உள்ளாட்சித்துறை தொகுதிமறுசீரமைப்பை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து நான்கு மாதங்களில் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி பத்தாண்டுகளுக்கு பிறகு உள்ளாட் சித்தேர்தலை தற்போது நடத்த முடியும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT