மதுரை விரகனூர் சந்திப்பு ரவுண்டானா பகுதியில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்துள்ள தால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க போதிய மின்விளக்குகள் பொருத் துவதுடன், திருப்புவனம் - விரக னூர் சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரையிலிருந்து தென் மாவட் டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ரிங்ரோட்டிலுள்ள விரகனூர் சந்திப்பை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ரிங்ரோடு நான்குவழிச் சாலையாக மாறிய பின் வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியா குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், சென்னை, திருச்சியிலிருந்து மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள், தூத்துக்குடி துறை முகத்துக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் இவ் வழியாகத்தான் செல்கின்றன.
மேலும், திருப்புவனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மதுரையிலிருந்து செல்லும் நகரப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களும், விரகனூர் ரவுண்டானாவை கடந்து தான் செல்ல வேண்டும்.
மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக மாறி விட்ட இப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரி சல் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு வைகை ஆற்றின் தென்கரையில் ஆரப்பாளையத்திலிருந்து விரகனூர் பாலம் வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதில் தெப்பக்குளம் பகுதி யிலிருந்து விரகனூர் சந்திப்பு வரையிலான சாலைப் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரவுண்டானாவுடன் இணையும் சாலைகளின் எண் ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ரவுண்டானா, வைகை ஆற்றுப் பாலத்தை கடந்து வரும் வாகனங்களுக்கு மிகவும் தாழ்வாக இருக்கிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் ரவுண்டானாவின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதையடுத்து பாலத்தின் முடிவில் வேகத்தடை அமைக்கப்பட்டது. உயர் மின்கோபுரமும், எச்சரி க்கை சிவப்பு விளக்கும் பொருத் தப்பட்டது. இவை சில நேரங்களில் செயல்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் ரவுண்டானாவை கவனிக்காமல் வரும் சில வாகன ஓட்டுநர்களால் விபத்துகள் நிகழ்கின்றன. தாழ்வாக இருக்கும் ரவுண்டானாவை சற்று உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி விபத்துகள் நடக்கும் இந்த இடத்தில் நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. போக்குவத்து நெரிசல் ஏற்படும் போது மட்டுமே, போலீஸார் இங்கு வருகின்றனர்.
விரகனூர் சந்திப்பில் போக்கு வரத்து நெரிசலை குறைத்து விபத்துகளை தடுக்க விரகனூர் - திருப்புவனம் சாலையில் மேம்பாலம் அமைப்பதே நிரந்தர தீர்வாகும் என பொது மக்கள், காவல்துறையினர் வலியு றுத்துகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரவு நேரங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களில் இவ் வழியாக வருவோர், ரவுண்டானா இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் ரவுண்டானாவில் பூச்செடிகள் வைத்து அழகுபடுத்துவதுடன், கூடுதல் மின்விளக்குகளைப் பொருத்தி பராமரிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க ரவுண்டானாவின் சுற்றளவைச் சுருக்கி, விரகனூர் - திருப்புவனம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையிடம் வலியுறுத்த உள்ளோம் என்று கூறினார்.