மதுரையில் கரோனா தொற்று அதிகமாக உள்ள 18 தெருக்களை மாநகராட்சி நிர்வாகம் ஒரே நாளில் சீல் வைத்தது. வாகனங்களும், மக்களும் செல்லாதவாறு அந்த தெருக்களை தகரங்களை வைத்து மாநகராட்சி ஊழியர்கள் அடைத் தனர்.
மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. இதையடுத்து மதுரையில் கரோனா தொற்று அதிகமாக உள்ள தெருக்களைக் கணக்கெடுத்து அந்தத் தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. மது ரையில் நேற்று ஒரே நாளில் 18 தெருக்களுக்கு மாநகராட்சி நிர் வாகம் சீல் வைத்தது. அந்த தெருவுக்குள் யாரும் நுழைய முடியாதவாறு தகரங்களை வைத்து அடைத்துள்ளது.
அந்த தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், பால், மருந்து, மளிகை, காய்கறிகள் ஆகியவற்றை மாநகராட்சி ஊழியர்களே வாங்கிக் கொடுக்கும் பழைய நடைமுறை நேற்று தொடங்கியது.
தொற்று பரவிய ஒரு ஹோ ட்டல், ஒரு வங்கி உட்பட சில நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் அதிகம் கூடாதவாறு பார்த்துக் கொள்ளும்படி மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணி யாமல் செல்வோருக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அரசு பேருந்து மட்டுமின்றி, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் செல்வோரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத் தப்படும் என மாநகராட்சி ஆணை யாளர் ச.விசாகன் தெரிவித் துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் வரை தினமும் 3 பேர் என்ற நிலையில் இருந்த கரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 18 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் 53 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
கரோனா அதிகரித்து வரு வதால் சுகாதாரத் துறை சார் பில் வாகனத்தில் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் கரோனாவைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டும். சாலைகளில் கூட்டமாக முகக்கவசம் இன்றியோ, சமூக இடைவெளியைக் கடைப்பிடி க்காமலோ பொதுமக்கள் நடந்து சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.