தமிழகம்

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளருக்குக் கரோனா; வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்

பெ.ஜேம்ஸ்குமார்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தமிழகத்தில் ஏற்கெனவே பல வேட்பாளர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கு.செல்வப்பெருந்தகை (55) போட்டியிடுகிறார்.

இவர் கட்சித் தொண்டர்களுடன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் வாக்குப் பதிவு முடிந்தவுடன், கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுதொடர்பாகச் செல்வப்பெருந்தகை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், கட்சியினர், உறவினர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் ’’என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT