கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு கவனம் செலுத்துவோம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
நாட்டின் பல மாநிலங்களில் கடந்த மாதத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா 2-வது அலை என்று மத்திய அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கா விட்டாலும் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர் நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 2-வது அலை வந்துவிட்டதற்கான அறிகுறி கள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இல்லாத அளவாக நாடு முழுவதும் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1 லட் சத்தை கடந்துவிட்டது. மகாராஷ்டிராவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந் துள்ளது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரதமருக்கு ஐஎம்ஏ எழுதிய கடிதத்தில், போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண் டும் என்று வலியுறுத்தி உள்ளது.
கரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதி கரித்து வருவது குறித்தும், மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித் தும் பிரதமர் மோடி கடந்த 4-ம் தேதி சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளு டன் காணொலி காட்சி மூலம் ஆலோ சனை நடத்தினார். அப்போது, கரோனா அதிகம் பரவும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய குழுக்களை அனுப்ப முடிவு செய்யப் பட்டது.
இதற்கிடையே, உலக சுகாதார தினம் நேற்று (ஏப்.7) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
நாம் வாழும் உலகை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக இரவும், பகலும் அயராது பாடுபடும் அனைவருக்கும் உலக சுகாதார தினத்தில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்போம். மருத் துவத் துறையில் ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்குமான நமது ஆத ரவை உறுதி செய்வோம். முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவு வது, பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, கரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதில் அனைவரும் முழு கவனம் செலுத்துவோம்.
அதேநேரம் நோய் எதிர்ப்பு சக் தியை அதிகரிப்பதற்கான அனைத்து செயல்களையும் மேற்கொண்டு நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம். தரம்வாய்ந்த, குறைந்த செலவிலான மருத்துவ வசதி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் மருத்துவத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்றுக்கு எதிரான போராட் டத்தை வலுப்படுத்துவதற்காக உலகி லேயே மிகப் பெரிய தடுப்பூசி இயக் கத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித் துள்ளார்.
முதல்வர்களுடன் இன்று ஆலோசனை
இந்நிலையில், கரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். கரோனா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படு கிறது. தொற்று அதிகரித்து வரும் நிலை யில், அதன் பாதிப்பு குறித்து 5 நாட்களில் 2-வது முறையாக பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.