தமிழகம்

கவுண்டம்பாளையம் தொகுதியில் 1.57 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை

பெ.ஸ்ரீனிவாசன்

வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்றாககருதப்படும் கோவை கவுண்டம் பாளையம் தொகுதியில், 2 லட்சத்து32,142 ஆண்கள், 2 லட்சத்து 32,990பெண்கள் மற்றும் 96 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4 லட்சத்து 65,228 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல்ஆணையம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டியிட்ட 12 வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொகுதியில் 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன.

ஆனால் கவுண்டம்பாளையம் தொகுதியில் 3 லட்சத்து 7,562 பேர் மட்டுமே வாக்களித்துள்ளதும் (66.11 சதவீதம்), ஒரு லட்சத்து57,666 பேர் வாக்களிக்கவில்லைஎன்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெண்களே அதிகள வில் வாக்களிக்க வரவில்லை. பெண்களில் 79,840 பேரும், ஆண்களில் 77,746 பேரும் வாக்களிக்கவில்லை. மூன்றாம் பாலினத்தவரில் மொத்தமுள்ள 96 பேரில் 16 பேர் வாக்களித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் கூறும்போது, “ஒரே தொகுதியில் இவ்வளவு வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பது நிச்சயமாக தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டிய ஒன்று. வாக்காளர்கள் மத்தியில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதையே இது காட்டுகிறது” என்றார்.

SCROLL FOR NEXT