தமிழகம்

மலேசியாவில் கலாம் தபால் தலை வெளியீடு

செய்திப்பிரிவு

மலேசிய தபால் துறை சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவுத் தபால் தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

மலேசியாவின் பேரா மாநிலத் தலைநகரமான ஈப்போவில் ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சாம்ரி அப்துல் காதிர் அப்துல் கலாமின் தபால் தலைகளை வெளியிட்டார். அதை கலாமின் உதவியாளர் பொன்ராஜ், பேரா மாநில இந்திய வர்த்தக சபைத் தலைவர் கே.எஸ். முனியசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அப்போது பேரா மாநில முதல் வர் சாம்ரி அப்துல் காதிர் பேசிய தாவது: அப்துல் கலாமைப் போலவே மீனவக் குடும்பத்தில் பிறந்தவன். இவை எங்கள் இரு வருக்குமிடையேயான ஆச்சர் யமான ஒற்றுமை என்றார்.

இரண்டரை கோடி மாணவர்கள்

கலாம் நினைவு தபால் தலையைப் பெற்றுக் கொண்டு பொன்ராஜ் பேசியதாவது:

தூக்கத்தில் வருவது கனவல்ல நம்மை தூங்கவிடாமல் செய் வதுதான் கனவு என்று கூறி இந்தியாவிலுள்ள 64 கோடி இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் கலாம்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இரண்டரை கோடி மாணவர்களை நேரடியாகச் சந்தித்து இந்தியாவின் முன்னேற் றத்துக்காக உறுதிமொழியை எடுக்க வைத்தார். மாணவர்களின் முன்னேற்றத்துக்காக அதிக அக் கறை காட்டிய கலாம் ஷில் லாங்கில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே தனது உயிரை இழந்தார் என்றார்.

முன்னதாக கடந்த மாதம் 15-ம் தேதி கலாம் பிறந்த தினத்தன்று அவரது நினைவுத் தபால் தலைகளை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT