தமிழகம்

நவீனத்தை விஞ்சிய ‘கிட்டி’ முறையிலான எலி ஒழிப்பு: ஆண்டுக்கு லட்சம் எலிகள் ஒழிப்பு

கே.சுரேஷ்

வயல்களில் நெற்பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அவற்றை விஞ்சும் அளவுக்கு பயனுள்ளதாய் இருக்கிறது பழமையான கிட்டி (பொறி) முறை.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களை எலிகள் கடித்து சேதப்படுத்துகின்றன. மேலும், வயலில் தேங்கும் தண்ணீ ரில் தத்தளிக்காமல் இருப்பதற்காக, நெற்பயிரை மடித்து விடுகின்றன. இவற்றால் சுமார் 20 சதவீத நெற்பயிர்கள் சேதமடைகின்றன.

எலிகளை கட்டுப்படுத்துவதற்காக வேளாண்துறை சார்பில், பல்வேறு விஷ மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், வயல்களில் எலிகளைப் பிடித்து உணவாக்கிக் கொள்ளும் ஆந்தை உள்ளிட்ட பறவைகள் அமர்வதற்காக, பறவைகள் இருக்கை அமைப்பது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

எனினும், அவற்றையெல்லாம் விஞ்சும் அளவுக்கு, மூங்கில் குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட கிட்டிகளைக் (பொறி) கொண்டு வயல்களில் எலிகளை அழிக்கும் முறை விவசாயிகளுக்கு பயனுள்ளதாய் இருக்கிறது. தற்போது சம்பா நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், கிட்டி முறையிலான எலி ஒழிப்பு முறையை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின் றனர்.

கிட்டி முறையில் எலி ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள, புதுக் கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அறிவொளி நகரைச் சேர்ந்த என்.ரவி கூறும்போது, “அறிவொளி நகரில் சுமார் 30 குடும்பத்தினர் பாரம்பரியமாக எலி பிடிக்கும் தொழிலைச் செய்துவருகிறோம். என்னிடம் 400 கிட்டிகள் உள்ளன. தேவையான கிட்டிகளை மூங்கில் குச்சிகளைக் கொண்டு நாங்களே வடிவமைத்துக்கொள்வோம்.

ஒரு ஏக்கருக்கு 300 கிட்டிகள் நட்டால், ஓரளவுக்கு எலிகளை அழித்துவிடலாம். ஒரு கிட்டிக்கு ரூ.4 என்ற அளவில் விவசாயிகளிடம் வாடகை வசூலிக்கிறோம். ஆண் டுக்கு சம்பா மற்றும் கோடை பருவத்தில் மட்டும் எங்களுக்கு வேலை இருக்கும்.

என்னிடமுள்ள 400 கிட்டிகளைக் கொண்டு ஆண்டுக்கு சுமார் 6,000 எலிகளைப் பிடிப்பேன். அதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களிடமுள்ள 10,000 கிட்டி கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் எலிகளைப் பிடித்து, அழித்து வருகிறோம். இந்த முறை யில் தமிழகமெங்கும் எலிகள் ஒழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லில் ஏற் படும் இழப்பு தடுக்கப்படுகிறது” என்றார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் வீரராகவபுரத்தைச் சேர்ந்த விவசாயி கே.கார்த்திகேயன் கூறும்போது, “எலி மருந்துகளை வரப்பு ஓரங்களில் வைக்கலாம். ஆனால், நடவு செய்துள்ள இடங் களில் வைக்கமுடியாது. அப்படி வைத்தாலும் எலிகளை முழுமை யாக அழிக்க முடியவில்லை. இதனால் கிட்டி முறையில் எலி களை அழித்துவருகிறோம்.

ஒரு ஏக்கருக்கு 35 மூட்டைகள் விளையும் என்றால், அதில் 6 மூட்டை நெல், எலிகளால் வீணாகும். இதனால் ரூ.5,500 இழப்பு ஏற்படும். மேலும், வைக்கோலும் வீணாகும். கிட்டி முறையில் எலிகளை ஒழிக்க ரூ.1,200 மட்டுமே செலவாகும் என்பதால் இந்த முறையைப் பயன்படுத்துகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT