கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மூலிகையால் வரையப்பட்ட தல வரலாறு ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயில், சைவ திருத்தலங்களில் முதன் மையானதாகும். இங்கு இறைவன் அரூபமாக உள்ளார் என்பது ஐதீகம். தினந்தோறும் வெளிநாடு, வெளிமாநில, உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இந் நிலையில், முன்னாள் கோயில் செயலாளர் பாஸ்கர தீட்சிதரின் முயற்சியால் கோயிலின் தல வரலாறு 16 ஓவிங்களாக வரையப் பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் மூலிகை மற்றும் அக்ரலிக் பெயிண்டால் வரையப்பட் டுள்ளன. சென்னையை சேர்ந்த ஓவியர் பத்மவாசன் சிதம்பரத்தில் தங்கி இருந்து 11 மாதங்களில் இந்த ஓவியங்களை வரைந்து கொடுத்துள்ளார்.
ஓவியங்கள் அனைத்தும் தத்ரூப மாக உள்ளன. இதற்கு மொத்தம் ரூ.10 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட போர்டில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் அழியாமல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், தண்ணீர், தீ இவற்றால் பாதிக்கப்படாத வகையில் தயாரிக் கப்பட்டுள்ளன. இந்த 16 ஓவியங் களும் மூலவர் சன்னிதியில் வைக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து கோயில் முன்னாள் செயலாளர் பாஸ்கர தீட்சிதர் கூறு கையில், “கோயில் கட்டளைதாரர் கள் உதவியுடன், எனது முயற்சியில் இந்த ஓவியங்கள் வரைய ஏற்பாடு செய்யப்பட்டது. காலத்தால் அழி யாத தல வரலாற்றை ஓவியமாக கோயிலில் வைக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் எண்ணம் நிறைவேறியுள்ளது. ஓவியர் பத்ம வாசன் ஒருவேளை உணவு உண்டு விரதமிருந்து இந்த ஓவியங்களை வரைந்துள்ளார்” என்றார்.