மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக திருவண் ணாமலை மாவட்டத்தில் 8 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத் தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என 75 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதை யொட்டி, ஒவ்வொரு தொகுதி யிலும், மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள வாக்குச்சாவடியை கண்டறிந்து, அந்த ஊராட்சியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப் பட்டுள்ளது.
செங்கம் தொகுதி கண்ணக் குருக்கை, திருவண்ணாமலை தொகுதி மெய்யூர், கீழ்பென் னாத்தூர் தொகுதி சாணானந்தல், கலசப்பாக்கம் தொகுதி வாழ்விடாந்தாங்கல், போளூர் தொகுதி அரியாத்தூர், ஆரணி தொகுதி பையூர், செய்யாறு தொகுதியில் புலிவலம், வந்தவாசி தொகுதி அயிலவாடி என மொத்தம் 8 ஊராட்சிகளில் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. வாக்குச்சாவடி அலுவலர், வாக்குப்பதிவு அலுவ லர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் ஆகியோர் பெண்களாகவே நியமிக்கப்பட் டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரை அழைத்து வர பேட்டரி வாகனம், வாக்குச்சாவடி உள்ளே அழைத்து செல்ல சக்கர நாற்காலி, உதவி மையம், வாக்களித்துவிட்டு வரும் வரை குழந்தைகள் மற்றும் பிள்ளைகள் விளையாடி மகிழ விளையாட்டு அறை, பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு அறை, கழிப்பறைக்கு செல்லும் வகையில் சக்கர நாற்காலியில் செல்லும் வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த வாக்குச்சாவடியில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடை பிடிக்கப்பட்டது.