புதுச்சேரி மூலக்குளம் வசந்தராஜா திரையரங்களில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள். 
தமிழகம்

புதுச்சேரியில் திரையரங்கில் வாக்குச்சாவடி; படம் பார்க்க வருவது போல் வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியிலுள்ள திரையரங்கம் வாக்குச்சாவடியாக மாறியது. படம் பார்க்க செல்ல வரிசையில் நிற்பது போல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

புதுச்சேரி மூலக்குளத்தில் வசந்தராஜா திரையரங்கம் உள்ளது. உழவர்கரை தொகுதியில் உள்ள இத்திரையரங்கில் கார்த்திக் நடித்திருந்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது.

திரையரங்கில் உள்ள ஒரு வாக்குச்சாவடி.

தேர்தலையொட்டி திரையரங்கில் நேற்றும், இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டது. இங்கு இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முன்பகுதியில் மக்கள் வெயிலில் பாதிக்காமல் இருக்க பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.

ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க திரையரங்குக்கு வந்தனர். திரையரங்கில் படம் பார்க்க டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பது போல் வரிசையாக நின்று வாக்களித்தனர். திரைப்பட போஸ்டர்கள் மத்தியில் வாக்களிக்கும் இடம், பூத் சாவடி எண் என்று அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT