தமிழகம்

அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

என்.கணேஷ்ராஜ்

"தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதல்வர் ஓபிஎஸ் தனது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதிகுட்பட்ட தென்கரை தெற்குரத வீதி செவன்த் டே நர்சரிப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 74 பேர் போட்டியிட்டனர். மாவட்டத்தில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 994 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 73 ஆயிரத்து 446 பெண் வாக்காளர்கள், 198 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 644 ஆண்கள், 1 லட்சத்து 40 ஆயிரத்து 94 பெண்கள், 34 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 772 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரியகுளம் தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 508 ஆண்கள், 1 லட்சத்து 45 ஆயிரத்து 4 பெண்கள், 105 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 617 வாக்காளர்கள் உள்ளனர்.

போடி தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 773 ஆண்கள், 1 லட்சத்து 41 ஆயிரத்து 810 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 604 வாக்காளர்கள் உள்ளனர்.

கம்பம் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 69 ஆண்கள், 1 லட்சத்து 46 ஆயிரத்து 538 பெண்கள், 38 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 645 வாக்காளர்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT