அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்து விட்டு விரலை காண்பிக்கும் ஆட்சியர் த.ரத்னா. 
தமிழகம்

அரியலூர் மாவட்டத்தில் வாக்களித்த மாவட்ட ஆட்சியர், வேட்பாளர்கள்

பெ.பாரதி

அரியலூர் மாவட்டத்தில் ஆட்சியர் த.ரத்னா, அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன், மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா, அமமுக வேட்பாளர் துரை.மணிவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுணாகுமார், ஐஜேகே வேட்பாளர் ஜவகர் உட்பட 13 வேட்பாளர்கள் வாக்களித்தனர். அதேபோல் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணன், அமமுக வேட்பாளர் ஜெ.கொ.சிவா, ஐஜேகே வேட்பாளர் சொர்ணலதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாலிங்கம் உட்பட 13 வேட்பாளர்களும் இன்று (ஏப்.06) காலை தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் வாக்களித்தார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியர் த.ரத்னா வாக்களித்தார். அதேபோல், அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அமமுக வேட்பாளர் துரை.மணிவேல் வைத்தியநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுணாகுமார் சிலுப்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணன் கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், ஐஜேகே வேட்பாளர் சொர்ணலதா காடுவெட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாலிங்கம் நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் வாக்களித்தார்

அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள தேவனூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

SCROLL FOR NEXT