திருச்சி மாவட்டத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை கடந்த 4 நாட்களில் 2 மடங்காக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஏப்.1-ம் தேதி 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றைய நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 384 ஆக இருந்தது.
ஆனால், அதைத்தொடர்ந்து, ஏப்.2-ம் தேதி 122 பேர், ஏப்.3-ம் தேதி 142 பேர், ஏப்.4-ம் தேதி 150 பேர் மற்றும் நேற்று 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திருச்சி மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 760 ஆக, அதாவது கடந்த 4 நாட்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் 5 பேருக்கு கடந்த வாரமும், தென்னூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் 7 பேருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னரும், ஸ்ரீரங்கம் வீரேஸ் வரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு நேற்று முன்தினமும் கரோனா தொற்று இருப்பது கண் டறியப்பட்டது. இதையடுத்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி யாக அறிவிக்கப்பட்டு, பிரதான நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளது.
மேலும், கன்டோன் மென்ட் பகுதியில் உள்ள 3 தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் 20-க்கும் அதிகமானோருக்கு கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாததுடன், கரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டவுடன் எஞ்சிய ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற நிறுவனத்தினர் அனுமதிக்காததே காரணம் என்றும் கூறப்படுகிறது. எனவே, கரோனா பரவ லைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.