தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடி களிலும் கரோனா தடுப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். வாக்களிக்க வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அவர் தெரிவித் துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தை ஜெ.ராதாகிருஷ் ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
பொதுமக்கள், தேர்தல் அலுவலர் களுக்கான கை கழுவும் திரவம், கையுறைகள், முகக் கவசம், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி, மருத்துவக் கழிவுகள் போட ஏதுவான குப்பை பை, பிபிஈ கிட் என அனைத்தும் வாக்குச்சாவடிகளில் தயாராக இருக்கும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 சுகாதாரப் பணியாளர்கள் பணியில் இருப்பர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 874 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவின் கடைசி நேரம், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கும் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வாக்களிக்க வரவேண்டும்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வீடுதோறும் சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணி, 7-ம் தேதி (நாளை) முதல் முழு வீச்சில் தொடங்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இதற்கான விழிப்புணர்வு முகாமை 7-ம் தேதி முதல் நடத்த உள்ளோம். கரோனா அதிகரிப்பால் முழு ஊரடங்கு என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். திருமணம், இறப்பு, கலாச்சார நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.