தமிழகம்

சென்னையில் போலீஸ் குடியிருப்பில் பூட்டிய வீட்டில் ஆசிரியை மர்ம மரணம்: தப்பிய கணவருக்கு வலை

செய்திப்பிரிவு

கொண்டித்தோப்பு போலீஸ் குடியி ருப்பில் பூட்டிய வீட்டில் ஆசிரியை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குழந்தையுடன் தப்பிய கணவரைத் தேடி திருநெல் வேலிக்கு தனிப்படை விரைந் துள்ளது.

சென்னை கொண்டித்தோப்பு தீயணைப்பு காவலர் குடியிருப்பு ஏ பிளாக் 2 வது மாடியில் வசிப்பவர் செந்தில்குமார் (31). வண்ணாரப்பேட்டை நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி என்ற சரண்யா (27). வீடு அருகே உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்துவந்தார். இவர்களுக்கு திரு மணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டரை வயதில் ஷிவானி என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் செந்தில் குமாருக்கு இரவுப் பணிக்கு வராத தால், தீயணைப்பு அலுவலகத்தில் இருந்து அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். தொடர்ந்து ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்தது. இதனால், தீயணைப்பு துறையினர் நேராக செந்தில்குமார் வீட்டுக்கு வந்தனர்.

வீடு வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த வீரர்கள் முத்துலட்சுமியின் அண் ணன் சக்திவேலுக்கு போன் செய்து வரவழைத்தனர்.

வீட்டின் உள்ளே கட்டிலில் முத்துலட்சுமி இறந்து கிடந்தார். குழந்தை ஷிவானியை தூக்கிக்கொண்டு செந்தில்குமார் தலைமறைவானது தெரிந்தது. ஏழுகிணறு காவல் ஆய்வாளர் ஆதிமூலம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். முத்துலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீஸார் கூறும்போது, ‘‘முத்து லட்சுமி விஷம் கொடுத்து அல்லது கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தாரா என்பது பிரேத பரிசோதனை முடி வில்தான் தெரியவரும். வீட்டில் உள்ள தடயங்கள் அனைத்தும் முத்துலட்சுமி கொலை செய்யப் பட்டதற்கான ஆதாரங்களாகவே உள்ளன. தலைமறைவாக இருக் கும் செந்தில்குமாரின் சொந்தஊர் திருநெல்வேலி. அவர் அங்கு சென்றிருக்க வாய்ப்பு உள்ளதால் ஒரு தனிப்படையினர் நெல்லை சென்றுள்ளனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT