ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகு திக்கு உட்பட்ட பகுதியில் பட்டணம் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள் சிலர் நேற்று காலைபட்டணம் - புதுப்பட்டி செல்லும் சாலையில்திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குறிப்பிட்ட அரசியல் கட்சி எங்கள் பகுதிக்கு பணம் கொடுக்கவில்லை. அதைக்கண்டித்து சாலைமறி யலில் ஈடுபடுகிறோம், என மக்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி விசாரணைக்காக 15 பேரை அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.