பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு 22 லட்சம் கையுறைகள்; சானிடைசர், வெப்பமானியும் வாக்குச்சாவடிக்கு அனுப்பிவைப்பு 

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வாக்காளர்களுக்கு 22 லட்சம் கையுறைகள், 48 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள், 2,673 வெப்பமானிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் என ஏழு தொகுதிகள் உள்ளன. இவற்றில் பழநி தொகுதியில் 405, ஒட்டன்சத்திரம் தொகுதியில் 352, ஆத்தூர்- 407, நிலக்கோட்டை 342, நத்தம்-402, திண்டுக்கல் தொகுதியில் 397, வேடசந்தூர் தொகுதியில் 368 என மொத்தம் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை (ஏப். 06) நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குச்சாவடிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

தனிமனித இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்கு வரும் வாக்காளர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்வதற்கு போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளிக்க வரும் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது கையுறை அணிந்து வாக்கை செலுத்த ஏதுவாக கையுறை வழங்கப்படவுள்ளது.

வாக்காளர்கள் கையுறை அணிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக 22 லட்சம் கையுறைகள், இதேபோல், 48 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒன்று வீதம் உடலில் வெப்பத்தை கண்டறியும் 2,673 வெப்பமானி, தேர்தல் அலுவலர்கள் அணிந்துகொள்ள முகக்கவசம் ஆகியவையும் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் உடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT