கனிமொழி: கோப்புப்படம் 
தமிழகம்

உடல்நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி: கனிமொழி ட்வீட்

செய்திப்பிரிவு

உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதிப் பங்கீடு குழுவில் இருந்த மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, தேர்தல் பிரச்சாரப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், திமுகவின் தென்மண்டலத் தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமிக்கப்பட்டார். எனவே, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடைசியாக ஏப். 02 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகள் ஏற்பட்டதால் உடனடியாக கனிமொழி சென்னை திரும்பினார்.

இதையடுத்து, அவருக்கு நேற்று முன்தினம் (ஏப். 03) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கனிமொழி இன்று (ஏப். 05) தன் ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT